தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சில காலம் இருந்ததன் பலன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தார் மைக்கேல் ராயப்பன்.
பின்னர் அருண்பாண்டியன் குழுவுடன் சேர்ந்து அந்த கட்சிக்கு ‘டாட்டா… பை ..பை’ சொல்லி விட்டு தனித்து இயங்கினார்.
சிம்புவுடன் மோதல்.விவகாரம் முடிந்ததா என்பது தெரியவில்லை.தற்போது போலீஸ் திரில்லர் படம் கையில் இருக்கிறது.
முக்கிய கேரக்டரில் அதர்வா. இவருக்கு எதிர் நடிகராக நந்தா.வில்லன் வேடத்தில்.! படத்தை இயக்குவது ரவீந்திர மாதவ்.
இந்த படத்துக்கு எந்த வகையில் நந்தா முக்கியம் ஆகிறார்?
ரவீந்தர் மாதவ் சொல்கிறார் :
“படம் ஆரம்பித்தபோதே இந்த படத்தின் வில்லன் கேரக்டர் பற்றி சொல்லியிருக்கிறேன். வில்லன் ரொம்பவும் வெயிட்டான ஆளாக இருக்க வேண்டும் என்பதை. . பெரிய தேடுதல் வேட்டை நடந்தது. புத்திசாலித்தனம் ,உடல் வலிமை ரெண்டும் சேர்ந்த கேரக்டர். நந்தாதான் சரியான ஆள் என முடிவு செய்து ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு ஸ்டார்ட் ஆகிவிடும்” என்றார்
இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.