கொரானா உயிர் கொல்லி நோய்ப்பயத்தினால் கோவில்களும் கதவடைப்பு செய்திருக்கின்றன.
இந்த நிலையில் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாதவர்கள் அதிக அளவில் விருந்தினர்கள் கூடி விடாமல் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் 11 பேர்,பெண் வீட்டை சேர்ந்த 11 பேர் என கிரிக்கெட் அணி மாதிரி ஆட்களை சேர்த்துக்கொண்டு கல்யாணம் நடந்திருக்கிறது.,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று ஒரு திருமணம் நடந்தது.
மணமக்கள் பெயர் விமல்- கமலி இவர்களது மணவிழா தேமுதிக தலைமை கழகத்தில் நடக்க விருந்தது.ஆனால், சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று தனது வீட்டிலேயே கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டார் கேப்டன்.
எளிய முறையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கல்யாணமே சுப வைபோகமே.!