உலகமே சுருண்டு விட்டது கொரானா வைரஸால்.!
இந்த வைரஸ் கொடுமை பற்றி முன்னதாகவே பல திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது என்று நினைவு படுத்துவதை விட ,அந்த கொடிய நோயை எப்படி எதிர்கொள்வது என்பதில் எச்சரிக்கை காட்டுவது நமக்கும் நாட்டுக்கும் நலம்.
இன்று மாலையில் இருந்து 144.
தமிழக மக்களின் பொருளாதார ரீதியான வாழ்க்கையில் பெருத்த மாற்றம் ஏற்படப் போகிறது.
அன்றாடங்காய்ச்சிகளின் நிலை என்னவாகும்?அரசு எப்படி எதிர்கொள்ளும்?
திரைப்படத் தொழிலாளர்களும் தினக்கூலிகள்தான்.
படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே ஊதியம்.!
இவர்களின் நிலை என்ன ?
அவர்களுக்கான பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று குரல் கொடுத்தார் அறிக்கை வாயிலாக!
முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது சூர்யா குடும்பம். பத்து லட்சம் !
அடுத்து சிவகார்த்திகேயன் 10 லட்சம் வழங்கினார்.
சரத்குமார் 100 மூட்டை ,பிரகாஷ் ராஜ் 150 மூட்டை ( 25 கிலோ மூட்டைகள் ) என அரிசி வழங்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழன் பார்த்திபன் என்பவர் 10 மூட்டை அரிசி வழங்கி இருக்கிறார்.இவர் விநியோகஸ்தராக துணை நடிகராகவும் இருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் 50 லட்சம்,விஜயசேதுபதி 10 லட்சம் ,ஆகியோர் நிதி உதவி செய்திருக்கிறார்கள்.