“தனித்திருங்கள் ,அதே நேரத்தில் விழித்திருங்கள்!”
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டம் எதிர்நோக்கியிருக்கிற பேரிடர் நோய் கொரானா .
புதிய தலைமுறையினரை அச்சுறுத்துகிறது.
இந்த நோயானது குடும்பத்தினரை தனித்தனியாக பிரித்து வைக்கிறது.கை குலுக்க முடியாது. ஹக் பண்ண முடியாது. தொட்டாலே தீட்டு என்பது ஒழிந்து புதை குழிக்குப் போய்விட்ட பிறகு புதிதாக வந்திருக்கிறது.
லண்டனில் இருந்து 10 நாட்களுக்கு முன்னர்தான் திரும்பியிருந்தார் ஸ்ருதிஹாசன்.
இவர் வீட்டு நிலவரம் என்ன?
“அம்மா (சரிகா.) மும்பையில் தனி வீட்டில் இருக்கிறார். அப்பாவும் (கமல்ஹாசன் ) தங்கை அக்ஸ்ராவும் சென்னையில் தனித்தனி வீடுகளில் இருக்கிறார்கள். நான் மும்பையில்.தனி வீடு.
எனக்கு சமைக்கத் தெரியும்.தேவையான அரிசி,எண்ணெய் ,பருப்பு,உருளைக்கிழங்கு ,வெங்காயம் எல்லாமே முன்னதாக வாங்கியாகி விட்டது. மூலிகை சோப்பும் செய்யத்தெரியும் .பிறகென்ன கவலை. வாசல் கதவை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறேன். “என்கிறார் ஸ்ருதி .