
ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்காது என்றே நம்புவோம்.
அவனவன் உயிர்ப் பயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசு கொடுக்கப் போகிற பணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இந்த நிலையில் கச்சேரி கேட்கிற மனம் அவனுக்கு இருக்குமா?
சீனாவை விட அமெரிக்காவில் கொரானாவின் கடுங்கரம் கொடுமையாக விளையாடி வருகிறது .உயிர் சேதம் அதிகம் என்கிறார்கள்.
இந்த நிலையில் ஏஆர் ரகுமான் அங்கு இசை நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்குமா?
இதனால் மே ,ஜூன் மாதங்களில் நடக்க இருந்த தனதுவட அமெரிக்க இசை நிகழ்ச்சியை ரகுமான் ஒத்தி வைத்து விட்டார்.
“உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிற எனது இசை ரசிகர்களை மகிழ்விப்பதை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை.
ஆனால் நமது இல்லங்களில் நமது குடும்பத்துடன் இருந்தாக வேண்டிய நிலை இருக்கிறது.இதனால் ரசிகர்களின் நலம் கருதி ,எனது குடும்பம் ,எனது இசைக்குழுவினர் நலம் கருதி எனது இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்திருக்கிறேன் “என்று அறிவித்திருக்கிறார்.












