வம்புக்கு பிரியாணி போட்டு வளர்ப்பவர்களில் இயக்குநர் ராம் கோபால் வர்மா நம்பர் ஒன் .
கொரானாவுக்கு பயந்து ஓடுகிறவர்களை விட இவரது வாய்க்கு பயந்து ஓடுகிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
கோவிட் 19 என்கிற கொடிய நோய்க்கு ஹாலிவுட் நடிகர் பலியாகி இருக்கிறார். இங்கிலாந்து பிரதமருக்கு கொரானா .உலகமே கதவடைப்பு செய்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது.
இந்த கதவடைப்பு பற்றிதான் ராம் கோபால் வர்மா கிண்டல் செய்திருக்கிறார்.
“இந்த கொரானா வைரஸைஅனுப்பி வைக்கும்படி கடவுளிடம் எவருடைய மனைவி வேண்டியிருப்பார் ?
இந்த வேண்டுதலுக்கு ஐந்து காரணங்களை சொல்கிறார் ஆர்ஜிவி?
1.விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்தானது.
2.மதுச்சாலைகள் பப்களை மூடியது.
3.நண்பர்களுடன் கூடி அரட்டை அடிக்க தடை.
4.ஆபிசில் அதிக வேலை என சொல்லி பொய் சொல்ல முடியாது.
5.கடைசியாக ஒன்றே ஒன்று மனைவியுடன் மட்டுமே இருந்தாகவேண்டிய நிலை.!
எப்படி ராம் கோபால் வர்மாவின் ஐடியா?