மது …
மன அமைதியைத் தருமா, மாது தழுவிய சுகம் இருக்குமா?
கற்பனை சுரக்குமா,கவிதை பிறக்குமா?
சிறகின்றி பறக்கலாமா ,சிற்றின்பம், பேரின்பமா?
மதுவுக்கு அத்தனை சக்தியா ?
—இப்படியெல்லாம் சொல்லித்தான் குடிப் பழக்கத்தை புகுத்துகிறார்கள்.
அது ஈரலை தின்று விடும். இளமையை கொன்று விடும் என்று குடிப்பவன் எவனும் சொல்லி எச்சரிப்பதில்லை .அவன் மட்டும் அழிவை நோக்கி நடப்பதில்லை ,அவனுடன் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு சென்று சாகடிக்கிறான், சாகிறான்.
குடிப்பவர்கள் திரை உலகில் அதிகம் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நடிகைகளும் மதுவருந்தும் பழக்கம் உள்ளவர்கள்தான்..சோசியல் கேதரிங் —சோசியல் டிரிங்க்ஸ் .
மதுவினால் சிறந்த நடிகர்களை ,கலைஞர்களை இழந்திருக்கிறோம்.
மது குடிக்காதே மாண்டு போகாதே என்கிற கருத்துகளை படங்களில் வலியுறுத்திவிட்டு மாலை மயங்கியதும் மதுவின் பிடிக்குள் செல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
வீட்டிலேயே இருங்கள் என்கிற கொரானா எச்சரிக்கை காலத்தை மது விரும்பிகள் பயன்படுத்திக்கொண்டு அந்த பழக்கத்தை விட்டு வெளியேறும்படி பிரபல இயக்குநர் சேரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.