இந்திய கிரிக்கெட் அணி த் தலைவர் விராட் கோலி .
பல வெற்றி,தோல்விகளுக்கு காரணமாக இருந்தாலும் இந்தியாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டுவருவதற்கு காரணமாக இருப்பவர்.
பாலிவுட் நடிகை,தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மாவை காதலித்து கரம் பற்றியவர்.
இவர்கள் இருவரின் தனித்த வாழ்க்கை எப்படி இருக்கிறது ,வீட்டிலேயே இருங்கள் என்கிற பிரதமர் மோடியின் உத்திரவு எந்த அளவுக்கு அமலாகி இருக்கிறது?
எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருக்கு!
விராட் கோலிக்கு ஹேர் கட் பண்ணியிருக்கிறார்..
பொதுவாக தற்கால ஹேர் கட்டிங் கோணல் மாணலாக ,சும்மாடு ஸ்டைலில் இருப்பதால் அவ்வளவாக கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் கரையான் அரித்த மாதிரி இருந்து விடக்கூடாதல்லவா!
திறமைசாலிக்கு நூல் கூட ஆயுதம்தான்.!
கிச்சன் கத்திரிக்கோலை வைத்துக் கொண்டு கோலிக்கு பிரமாதமாக ஹேர்கட் பண்ணியிருக்கிறார் அனுஷ்கா .
கோலி ரேஞ்சுக்கு ஸ்டார் ஹோட்டல் கட்டிங் குறைந்தது 10 ஆயிரமாவது இருக்கும். அது மிச்சம். ஆனால் இதை விட அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கிற காதல் வாழ்க்கை எவ்வளவு அழகாக பயணிக்கிறது என்பதுதான் முக்கியம்.