
உப்பெனா ..தெலுங்குப்படம்.
இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்த படம் கொரானா வைரஸ் உறங்கு உத்திரவினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது.
ஆனாலும் படத்தைப்பற்றிய புரமோஷன் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
வீட்டுக்கு மத்தியில் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு விஜய் சேதுபதி உட்கார்ந்திருக்கிற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கம்பீரமாக பில்டர் சிகரெட் புகைப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார்.
இப்படியெல்லாம் போஸ் கொடுக்கலாமா என்று யாரும் அங்கு கண்டன அறிக்கைகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.












