இப்படியொரு நிகழ்வினைப்பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருக்கும்.
பாஜக காவிக்கட்சி.
திமுக கருப்புச்சட்டை கட்சி.
“கொரானா தடுப்புக்கு நீ என்ன நிதி உதவி செஞ்சே ?”
தமிழக பாஜக தலைவர்கள் பிரமுகர்களை பார்த்து கேட்டது திமுக.
“நீங்கதான் எதுவுமே செய்யலே “என்று பாஜக பதில் சொன்னது.
திமுக சட்ட ரீதியாகவே இந்த பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு விட்டது.
“தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பாஜக 100 கோடி நிதி கொடுக்க வேண்டும்”என்று வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கிறது.
2018-19 ஆம் ஆண்டில் 800 கோடிக்கும் அதிகமான நிதி உதவி பெற்ற அரசியல் கட்சி பாஜக.தான்.!
திமுக சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் விவரம் :
முழு விவரம்:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், தி.மு.க. மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் இலாபம் அடையலாமா எனத் தமிழக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி, தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர். அதோடு, தி.மு.கழக தலைமை நிலையமான ‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘கலைஞர் அரங்கை’ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது. தி.மு.கழக நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இவை அனைத்தையும் ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது’ போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான ‘தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அவர்களின் சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பா.ஜ.க. தேசிய தலைவர் திரு. ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு. எல்.முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.