ஷங்கர் படம் என்றால் அது பிரமாண்டமாக இருக்கும் என்பதுடன் பிரபலங்களும் அதில் இணைந்திருப்பார்கள் என்பது கடந்த காலம் காட்டுகிற உண்மை.
தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரை ப்படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்திலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடந்து வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் அஜித்தை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது
.மேலும் அப்படத்தில் சீயான் விக்ரம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வதந்’தீ’ காட்டு தீயாக பரவுவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பார்களா?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.