
பிரதமர் மோடியின் டார்ச் லைட் பேச்சுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்து கட்டி அடிக்கிறது.
மக்கள் எதற்கான தீர்வினை எதிர்பார்த்தார்களோ அது எதுவும் இல்லை என்பது ஏமாற்றமே.!
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருத்து என்ன?
“பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.
பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு,
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம்,
ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என,
ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.” என்பதாக கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி “இது பெரும்பான்மையினரின் மைண்ட் வாய்ஸ்’ என்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்.”டார்ச் லைட் தமாஷாவின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை”என்கிறார்












