“உன்னுடைய முடிவு சரியானதுதான் என்று நம்புகிறாயா?”
“ஆம் நம்புகிறேன். இந்த முடிவுக்காக நான் பின்னர் வருந்தப்போவதில்லை” என்று தன்னுடைய மணமுறிவு ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்தார் மலைகா அரோரா. ஒரு காலத்தில் பாலிவுட்டின் கவர்ச்சி ராணியாக இருந்தவர்.
மகளின் உறுதியான இந்த முடிவில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லையென்றாலும் ஒத்துப்போகவேண்டிய கட்டாயம். அர்பாஜ் கான் -மலைகா தம்பதிக்கு ஒரு மகனும் உண்டு.
முன்னாள் கவர்ச்சி நடிகையான மலைகா 45 வருடங்களை கடந்து விட்ட ‘அழகி’
இவருக்கு அர்ஜுன் கபூர் என்கிற இளம் நடிகருடன் காதல். இந்த மன்மதன் போனிகபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர். மகனின் பொருந்தாத காதல் பற்றி தந்தை போனிகபூருக்கு கவலை இல்லை.
மலைகா என்றால் தேவதை என பொருளாம். இந்த தேவதையிடம் எந்த புதையலைக் கண்டாரோ அர்ஜுன்கபூர். மணம் செய்துகொள்ளுகிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
“பழுத்த பழம் தித்திக்குமடி ,அந்த பாலும்காயெல்லாம் கசக்குமடி ” என்று ஸ்ரீ வள்ளி படத்தில் விருத்தனாக வந்த டி .ஆர்.மகாலிங்கம் பாடிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
சரி அவர்களின் முடிவு.நமக்கு ஒரு நாள் செய்தி.
இந்த லாக் டவுன் காலத்தை அந்த தேவதை எப்படி கடத்துகிறார்.?
இன்று லட்டு செய்திருக்கிறார்.
“ஏம்மா இந்த வயசில் இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா…கவர்ச்சியை கட்டுப்படுத்தும்மா” என்று நெட்டிசன்கள் குறை சொல்லி இருக்கிறார்கள்.