கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இந்தியாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.. இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது .
இதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஃபேமிலி என்று டைட்டில் வைத்துள்ளனர். அமிதாப்பின் தொலைந்து போன கறுப்புக் கண்ணாடியை தேடுவதுதான் சப்ஜெக்ட் .எல்லா மாநிலத்தவர்களையும் ஒருங்கிணைத்து எடுக்கப்பட்ட படம்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது, ஆரோக்கியமாக இருப்பது, உடல்நலனை பேணுவது, வீட்டிலிருந்தபடி பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி இந்தக் குறும்படம் பேசுகிறது. இதை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கி இருக்கிறார்.