என்னடா இன்னும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் பகிரங்க கடிதத்துக்கு யாரும் நக்கல் அடிக்கலியே என்கிற குறை இருந்தது.அந்த குறையை பிக்பாஸ் காயத்ரி ஜெயராம் போக்கி இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார்.
அந்த கடிதம் பிரதமரின் பார்வைக்குப் போனதா இல்லையா அல்லது வேறு எங்கும் போய்சேர்ந்ததா என்பது தெரியவில்லை.ஏனென்றால் அது ‘பகிரங்க கடிதம் ‘ஆச்சே!பொதுமக்களுக்கும் அந்த கடிதத்தின் சாரம் தெரியவேண்டுமென்பதற்காகத்தானே ‘பகிரங்க கடிதம்’எழுதப்படும்.!
இது அரசியலில் இருந்து வருகிற கருத்து சுதந்திரம்தான்.!
இந்த கடிதத்துக்கு பிஜேபி சார்பு தலைவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.
பாஜக.வை சேர்ந்த டான்ஸ்மாஸ்டர் காயத்ரி ரகுராம் கிண்டல் பண்ணியிருக்கிறார்.
, ’நீங்கள் ஏன் சீனா அதிபருக்கும் தப்லீக் ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது?,
தமிழகத்தில் யார் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருக்கின்றார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
எந்தவித ஆதாரமும் இல்லாமல் கடிதம் மூலம் குற்றச்சாட்ட கூடாது.
தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விளக்கேற்றி காட்டினார்கள் .
நீங்கள் அதில் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கு வேதனையாக இருக்கிறதா? மத்திய மாநில அரசுகளின் கடும் உழைப்பை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.