சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சக்கைப்போடு போட்ட படம் சந்திரமுகி.
சூப்பர்ஸ்டார் ரஜினி ,ஜோதிகா ,லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ,வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த கதையின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பி.வாசு முன்பே தயார் செய்து வைத்திருந்தார்.
சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லையோ என்னவோ சந்திரமுகி 2க்கு தற்போது மிகப்பெரிய தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கப்போகிறார் .இயக்கப்போவது பி.வாசு .
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்.
இதர டெக்னீஷியன்ஸ் பட்டியல் இன்னும் தயாராகவில்லை. வாசுவையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. வடிவேலு இருப்பார் என்று ஒரு தகவல் இருக்கிறது.
இந்த படத்துக்கான வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து பிரதமர் நிதிக்கு 50 லட்சம் ,முதல்வர் நிதிக்கு 50 லட்சம் ,பெப்சி யூனியனுக்கு 50 லட்சம் ,டான்சர் யூனியனுக்கு 50 லட்சம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு 25 லட்சம், ராயபுரம் தேசியநகர் தினக்கூலிகள் நலனுக்கு 75 லட்சம் என 3 கோடியை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.