உலகம் முழுவதும் கொரானா அடக்கம் செய்யப்பட பின்னர்தான் ‘மாஸ்டர்’படம் வெளியாகும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.தீபாவளி ரிலீசா?
ஏறத்தாழ இந்திய திரைப்பட உலகத்தின் நிலையும் இதுதான்!
தமிழ்த்திரை உலகத்தின் முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யின் குடும்பம் மகன் சஞ்சய் நீங்கலாக மூவர் மட்டுமே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகன் சஞ்சய் கனடாவில்.! தந்தை எஸ்.ஏ.சி.யுடன் விஜய் அவராக பேசினால்தான் உண்டு.
மகனை பற்றிய மன உளைச்சலில் விஜய் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.
கனடாவில் இருக்கிற மகனுடன் தினமும் வீடியோ கால் வழியாக தொடர்பு கொள்ள முடியும் என்றாலும் ஒற்றை மகன் இத்தகைய சூழலில் தனியே இருப்பது என்பது எந்த தந்தையையும் அசைத்துப் பார்த்து விடும்.
கனடாவில் தற்போதைய நிலவரம் 404651 பேர் தனித்து இருக்கிறார்கள். 23301 பேர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறப்பு என்பது 653 ஆக இருக்கிறது. கனடா அரசு அமெரிக்காவைப் போல் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்கிறது. தமிழீழ புலம்பெயர் தமிழர்கள் கனடாவில் அதிகமாக இருக்கிறார்கள்.
அண்டை நாடுகளில் இருக்கிற கனடாவின் குடிமக்களை அழைத்து வருவதில் கனடா கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.
ஆனால் கனடாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய எந்த விமானத்துக்கு அனுமதி இல்லை.
விமான போக்குவரத்து சீரடைகிற போது இந்தியா திரும்புகிற இந்தியர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பார்களா என்பதையும் உறுதியுடன் சொல்ல முடியவில்லை.
பலவித சோதனைகளுக்கு பிறகுதான் அனுமதி கிடைக்கும். விமான நிலையம் அருகில் குறிப்பிட்ட சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
குறிப்பாக விஜய்யின் மகன் என்பதால் கடுமையுடன் நடந்து கொள்வதற்கும் இடம் இருக்கிறது. இங்கு அரசியல்தான் எல்லாமே! ப.சிதம்பரத்தையே போட்டுப்பார்த்தவர்கள் அல்லவா!
இதனால் லண்டனில் இருக்கிற மாமனார் வீட்டிற்குத்தான் சஞ்சய் செல்வார் என விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரம் சொல்கிறது. இந்த நட்பு வட்டமே தொலைபேசி உரையாடலுக்கு மட்டும்தான்.சமூக விலகல் என்பதால் எவருடனும் நேரில் பேசுவதில்லை.
இதனால் விஜய் தொடர்பான செய்திகள் எல்லாமே உறுதி செய்ய முடியாத அளவுக்குத்தான் இருக்கின்றன.