கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கவேண்டும். சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, தடை உத்தரவை மீறும் செயலாகும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சமீபத்தில் தமிழகஅ ரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகரும்,மக்கள்நீதிமய்யத்தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, ” அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர்.
என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். கமிஷன் வாங்குவதற்கு ஒதுக்கி வைப்பதற்கு இது உரிய நேரம் அல்ல. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.(This is no time for commision or omission.People are watching ) என்றும், மேலும், மற்றொரு டுவிட்டில்,’மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு உத்தரவு குறித்து தன்னாட்சி முடிவு எடுக்கையில் என் மதிப்பிற்குரிய முதல்வரே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் எஜமானரின் குரலுக்காகவா?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.