நாளை மறுநாள் 15 ஆம் தேதி நல்ல நாள். முகூர்த்த நாள் . அன்றைய நாளில் தனது திருமணத்தை தடபுடலாக துபாயில் நடத்த திட்டம் போட்டிருந்தார் பிரபல நடிகர் நிதின்.
ஆந்திரத்து முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் .
வெளிநாட்டில் வாழ்கிற ஷாலினி என்கிற முதுகலை பட்டதாரியை மணந்து கொள்வதற்கு நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்தை துபாயில் நடத்தி விட்டு வரவேற்பு நிகழ்ச்சியை ஹைதராபாத்தில் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கொரானாவினால் எல்லாமே தடைபட்டுவிட்டது.
மணமகள் குடும்பத்துடன் பேசி இனிய மங்கல நிகழ்வை தள்ளிவைத்து விட்டார்.
“திருமணம் என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய நிகழ்வு ஆகும்.ஆனால் உயிர் என்பது அதனை விட உயர்வானது ஆகவே எனது திருமண விழாவை தள்ளிவைத்திருக்கிறேன்” என்கிறார் நிதின்.