வாழ்க்கை இன்பமாக இருக்கட்டும் என எல்லோருக்காகவும் வேண்டுகிறவர் கலைப்புலி தாணு..
“என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே “என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பதிவு செய்யப்பட்ட வாசகம் மாதிரி……
“என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே “என்றால் அது டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு மட்டுமே உரித்தானது.
இவைகளை போல “இன்பநாளிது ,இனிய நாளிது “என்றால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாசகம்.
திரை உலக நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல பிற சுப நிகழ்வுகளிலும் பேசத் தொடங்கும்போது “இன்பநாளிது இனிய நாளிது “என்கிற தனது முத்திரை சொற்களால் தாணு பேசத் தொடங்குவார்.
இவரது தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த முதல் படம் சச்சின்.அடுத்து தெறி .எத்தனை ஆண்டு இடைவெளி ! என்றாலும் மறக்காமல் நினைவு கூர்ந்திருக்கிறார் தாணு .
தம்பி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த சச்சின், தெறி ஆகிய திரைப்படங்கள் இன்றும் மக்களால் கொண்டாடப்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்