நடிகர்கள் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதன் காரணமாக பிற நடிகர்களை இழிவாக நினைக்கிறார்களா ,அல்லது அவர்கள் ,வளரக்கூடாது என்று நினைக்கிறார்களா ?
தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகருக்காக மொட்டை போட ,அலகு குத்தி ,காவடி எடுக்க தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் சண்டை என்று வந்து விட்டால் வார்த்தைகளால் குத்தி கிழித்துக் கொள்கிறார்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சண்டையைப் பற்றி கஸ்தூரி காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.
‘அஜித்தும் விஜய்யும் எந்த குறை யும் இல்லாம நல்லா இருக்கணும்.
இருப்பாங்க.
வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை;
ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா?
திருந்துங்க பிரதர்ஸ்.
இக்னோர் நெகட்டிவிட்டி. வாழு வாழ விடு “என்று பதிவு செய்துள்ளார்.
இதனால் என்ன ஏற்படும்.? கஸ்தூரி மீது பாயும். வேணாம் பிரதர்ஸ்.!