காலம் கடந்து சென்றுவிட்டது ,காலன் கவர்ந்து சென்று விட்டான்.
ஆனாலும் ஸ்ரீதேவியின் நினைவுகளை கடத்தி செல்ல முடியவில்லையே.!
பிரபல போட்டோகிராபர் தபுரட்னானியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நடிகை ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட படம் இது.மகள் ஜான்வி ,குஷி இருவருமே அம்மாவைப் போல காஞ்சீவரம் பட்டுப்புடவை அணிந்து கொண்டிருக்கிறார்கள். தோளில் வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வையை மடித்து துண்டு போல போட்டிருக்கிறார் போனிகபூர்.
நினைவில் நிற்கிறார் ஸ்ரீதேவி .இன்னும் அவரை மறக்க இயலவில்லை என்பதே உண்மை.