பைக் ரேஸ் பிரியர் தல அஜித். கார் ரேஸிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
பெங்களூருவுக்கு பைக்கில் சென்று திரும்பிய அனுபவம் அஜித்துக்கு இருக்கிறது. மீண்டும் அப்படி ஒரு அனுபவம் !
ஹைதராபாத் -டு -சென்னை !
650 கிலோ மீட்டர்.
எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிற வலிமை படத்தில் சூப்பர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.இதற்காக ஒரு ஸ்பெஷல் பைக் தயார் செய்யப்பட்டது. அந்த பைக்கை வைத்துதான் ஹைதராபாத் ராமோஜி ராவ் நகரில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
கொரானா ஊரடங்கு உத்திரவினால் அஜித்குமார் சென்னை திரும்ப முடியவில்லை.
ஆனாலும் ராமோஜி ராவ் நகரிலேயே இருந்து விட முடியாது.கார் பயணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை.
அந்த ஸ்பெஷல் பைக்கை எடுத்துக் கொண்டு சென்னைக்கு பயணமாகிவிட்டார் அஜித் என்கிறார்கள்.
பெட்ரோல் மற்றும் உணவுக்காக மட்டுமே சில இடங்களில் பைக் நின்று இருக்கிறது.
படத்தில் மட்டுமல்ல ,நிஜத்திலும் சாதனையாளர்தான்! டூப் போடாதவர்.
பிரசுரம் ஆகியிருக்கிற படங்கள் பழைய படங்கள்.