கொரானா ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் சளைக்காமல் கை கால் இல்லாத செய்திகளும் ஓடத்தான் செய்கின்றன.
தெலுங்கில் ஆச்சார்யா என்கிற சிரஞ்சீவியின் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட திரிஷா பின்னர் அந்த படத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினார் என்பது பழைய செய்தி..இந்த செய்திக்கு திரிஷா தரப்பு இதுவரை எவ்வித விளக்கமும் தரவில்லை.
அந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்கப்போகிறார் என்பதை அறிந்த பிறகுதான் தன்னுடைய கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விடும் என்கிற அச்சம் வந்திருக்கிறது திரிஷாவுக்கு என்பதாக சொன்னார்கள்..ஆனால் திறமையான நடிகையை டம்மியாக்கும் அளவுக்கு சிரஞ்சீவி குழுவினர் தரம் தாழ்ந்து விடமாட்டார்கள் என நம்பலாம்.
கூறாமல் சந்நியாசம் கொள் என்கிற முது மொழிக்கு ஏற்ப திரிஷா விலகிவிட்டதாக ஊடகங்கள் விளக்கம் கூறின.
காஜல் அகர்வால் மறுபடியும் கோலிவுட்டில் திக் விஜயம் செய்யப்போகிறார் என்கிற செய்தியுடன் இன்னொரு செய்தியும் பேசப்படுகிறது.
உதயநிதிக்கு ஜோடியாக படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலை அணுகியதாகவும் ஆனால் அவர் நடிப்பதற்கு மறுத்து விட்டார் என்பதாகவும் சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.ஆனால் கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசு கிசு இதுதான்! காஜல் அகர்வாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அளவுக்கு செய்திகள் பின்னப்படுவதின் ரகசியம் புரியவில்லை.
முன்னொரு தடவை அட்வான்ஸ் பணத்தை காஜல் திருப்பித்தரவேண்டும் என்று உதயநிதி புகார் செய்திருந்தார். அதுதான் தற்போது நடிக்க மறுத்ததற்கு காரணமாக இருக்கலாமோ?கடந்ததை மறப்பதுதானே தொழில் தர்மம்,!துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் எம்.ஆர்.ராதா நடிக்கவில்லையா?