தொழில் நுட்ப ரீதியான மாற்றங்களை மேலை நாடுகள் பின்பற்றுவதைப்போல தமிழ்நாடு பின்பற்றுவதில்லை.
உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே அதனுடைய தாக்கம் அறிந்து தனது கருத்துகளை சொல்லிவருகிறார்.
தற்போது ஆன்லைன் தளம் இந்தியாவில் அதிக அளவில் சென்றடைகிறது. இந்த ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கென பல தயாரிப்பாளர்கள் அகில இந்திய அளவில் தயாராகிவருகிறார்கள். வெப் சீரியல்கள் கையளவு செல்லில் பார்க்கமுடிகிறது.
தற்காலத்தில் தியேட்டரில் படம் வெளியான மறு நொடியே தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய தளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டுவிடுகிறது. இதைப் பற்றி தியேட்டர்காரர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.தயாரிப்பாளர்களும் புகார் பண்ணுவதுடன் சரி. இன்றுவரை தமிழராக்கர்ஸை தடை செய்யமுடியவில்லை.
தற்போது கொரானா ஊரடங்கு உத்திரவினால் இந்தியா முழுமையும் தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. ஆனால் ஆன்லைன் வர்த்தகம் மட்டும் சுறுசுறுப்புடன் இருக்கின்றன.
ஆன்லைனில் தன்னுடைய பொன் மகள் வந்தாள் படத்தை வெளியிட தயாரிப்பாளர் சூர்யா முடிவு செய்திருக்கிறார்.
இதற்கு தியேட்டர்க்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் .சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களை திரையிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சூர்யாவின் ரசிகர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஆதரவை திரட்டி இருக்கிறார்கள். சூர்யாவின் அறக்கட்டளை பற்றியும் அதன் வழியாக ஆண்டுதோறும் பயன் பெறும் மாணவர்களை பற்றியும் எடுத்துச்சொல்லி அன்புள்ள சூர்யா என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி சோசியல் மீடியாவில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு ஆதரவு திரண்டு இருக்கிறது.