காப்பான் படத்தை அடுத்து சூர்யாவின் நடிப்பில்,சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், சூரரைப் போற்று.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள அருவா படத்தில் சூர்யா நடிக்கிறார்.
இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்கிறார்கள்.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார் .இசை ஜி.வி.பிரகாஷ்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாடிவாசல் படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ”இசை ரீதியில் இது ரொம்பவே முக்கியமான படம். நமது வேர்களில் கலந்திருக்கும் இசை, இப்படத்தில் நிரம்பியிருக்கும். ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் மீயுசிக் அமைக்கவுள்ளோம். மேலும் காளைகளுக்காகவும் ஒரு மாஸான தீம் இருக்கும். ஒரு ஐடியாவாக பேசி கொண்டிருக்கிறோம்’ என தெரிவித்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ் .