
கோலிவுட், டோலிவுட் என்று தென்னக சினிமாவில் முன்னணியில் இருப்பவர் தமன்னா .
வெள்ளை வெளேர் என்று சலவை செய்ததை போன்ற மேனி அழகு உள்ளவர் .
இவர் அண்மையில் மும்பையில் மிகவும் காஸ்டலியான பிளாட் ஒன்றை வாங்கியிருந்தார் அரபிக் கடலைப் பார்த்து அமைந்துள்ள இந்த பிளாட்டின் விலை 16.60 கோடியாகும் .
திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டில் ஆவதற்காக இந்த ஆடம்பர பிளாட்டை வாங்கியிருந்தார்என்று சொன்னார்கள் . இவருக்கு ஏற்ற தொழிலதிபர் மாப்பிள்ளையை பெற்றோரும் தேடி வந்தனர்..
ஆனால் கல்யாணத் திட்டத்தில் தற்போது மாற்றம் .
திட்டம் தள்ளிப்போய்விட்டது என்கிறார்கள் . புதிய படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாராம் தமன்னா. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பாயல் ராஜ்புத் தொடங்கி வைத்த தலையணை பந்தயம் தமன்னாவையும் தொற்றிக் கொண்டு இருக்கிறது..
சிவப்பு நிற ஹை ஹீல்ஸ் .வெள்ளை தலையணையை தன்னுடைய பால்வண்ண உடம்பில் பெல்ட்டினால் கட்டிக் கொண்டு படுக்கையில் சாய்ந்திருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
“வேடிக்கையாகத்தான் இ ருக்கிறது.ஆனால் நடமாட முடியாது.”என்கிறார் தமன்னா .












