வாரிசுகள் நடிக்க வருவது இந்திய சினிமாவுக்கு புதிது இல்லை.
பாலிவுட் ,டோலிவுட் ,மல்லுவுட் ,கோலிவுட் என எந்த உட்டை எடுத்தாலும் வாரிசுகள் மின்னுவதைக் காணலாம்.சிலர் எரி கற்களாக மாறியதும் உண்டு.!
தளபதி விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சியை முடித்திருக்கிறார்.
இவர் சென்னை திரும்பியதும் நடிப்பதில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அது உண்மையாகும் போலிருக்கிறது.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிற மக்கள் செல்வன் விஜயசேதுபதி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.ஆணவக்கொலையை பற்றிய அந்த படத்தில் நாயகனாக சிரஞ்சீவியின் உறவினர் நடித்திருந்தார்.நாயகியாக கீர்த்தி ரெட்டி நடித்திருக்கிறார். தமிழில் கீர்த்தி ரெட்டி நடிப்பாரா என்பது தெரியவில்லை.
உப்பெண்ணா என்கிற அந்த படத்தில் விஜய்சேதுபதிதான் வில்லன் . அந்த படத்தின் கதையைப் பற்றி தளபதியிடம் விவாதித்திருக்கிறார் மக்கள் செல்வன்.
கதை பிடித்து விட்டது விஜய்க்கு.!
அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார் விஜயசேதுபதி. அந்த படத்தில்தான் சஞ்சயை நாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறார்கள்என்கிறார்கள்.. வில்லன் சேதுபதிதான்.!
அடுத்த ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். கொரானாவும் ஒழிந்துவிடும் என்பது நம்பிக்கை.
இந்த செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.