ஓடிடி தளத்தில் வெளியாகிற படங்களையும் ஆஸ்கார் விருது பரிசீலனைப் பட்டியலில் சேர்த்தால் என்ன? சேர்த்து விட்டார்களாமே ?
உலகம் முழுவதும் கொரானா வைரஸால் மொத்த திரை உலகமும் மூச்சடக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது . புதிய படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. எந்த மொழியிலும் தயாரிப்பு பணிகள் நடக்கவில்லை. ஆக எந்த படத்துக்கு ஆஸ்கார் வழங்க முடியும்.?
ஆள் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும் ?
மார்ச் மாதம் வரை ஒருசில படங்களே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டிற்கு அந்த படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுமா?அது நியாயம் இல்லையே!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டலில் அதாவது ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக வெளியாகும் படங்களும் 2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்ய தகுதி பெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் ஓடிடி யில் வெளியிடவுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.மகிழ்ச்சி நீடித்து நிலைக்கவேண்டும்