நயன்தாரா…
இந்த ஒற்றைப்பெயர் மட்டுமே தென்னக திரை உலகில் உரத்து சொல்லப்படுகிற பெயராக இருக்கிறது.
வதந்திகளை வரப்பு வெட்டி பாய விட்டாலும் அவை நிலத்தில் பட்டதுமே காய்ந்துபோய்விடுகின்றது . அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வலிமையுடன் இருக்கிறார்.இவருக்கு லேடிசூப்பர் ஸ்டார் என்பது சிலர் சூட்டிய பெயர். மனவலிமைதான் இவரது அருஞ்சொத்து.
எத்தனையோ தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்து இருந்தாலும் துவண்டு போகாது எழுந்து நிற்பவர்.
2011-ல் தெலுங்கில் ஸ்ரீ ராம ராஜ்யம் என்கிற படத்தை எடுத்தார்கள். என்.டி .ஆர் பாலகிருஷ்ணா ராமனாகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்தனர்.
நயன்தாரா சீதையாக நடிக்கக்கூடாது என சில கற்புக்கரசர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
துச்சமென எதிர்த்து நின்று நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் விடை பெற்று கிளம்பும் நேரம்.
மொத்த யூனிட்டும் மலர் தூவி வழியனுப்புகிறது.கண்கள் பணிக்க கையெடுத்து அனைவரையும் கும்பிடுகிறார். இயக்குநரின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார் நயன்.
தமிழ்ச்சினிமாவில் காண முடியாத காட்சி.ஆந்திரத்தில் நிகழ்ந்தது.
அந்த காணொளியை தற்போது காணுங்கள்.!