மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அளவுக்கு யாரும் கடுமையாகக் கண்டித்திருக்கமாட்டார்கள்.
வார்த்தைகளில் வலிமையான சொற்கள். இவருக்கும் பாஜக அரசுக்கும் முட்டல் மோதல் டிவிட்டரில் அவ்வப்போது தெறிக்கும்.!
தற்போது கொரானா ஊரடங்கு மேலும் இரு வார நீட்டிப்புக்கு கண்டனம் தெரிவித்த்ருக்கிறார்.
“இப்போதைக்கு ஊரடங்கு உத்திரவு ஒய்வு பெறுவதாக இல்லிங்க.அதை இந்த அரசு விரும்பல.அதைப்பற்றிய திட்டம் எதுவும் இல்லை.கொள்கையும் கிடையாது. கையில் பணமும் இல்லை.
அதனால் அனைத்துக் கட்சிகள் ,பொருளாதார மேதைகள்,விஞ்ஞானிகள் ,கார்ப்பரேட்டுகள் எல்லோரையும் ஒன்றாக சேர்த்து வைத்து ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.இதற்கான முயற்சியை பிரதமர்தான் முன்னெடுக்க வேண்டும்” என்பதாக அனுராக் காஷ்யப் கூறி இருக்கிறார்.