பாலிவுட்டில் நடிகர் -நடிகையரில் பெரும்பாலோர் மதுவின் ருசி அறிந்தவர்கள்தான்.!
அற்புதமான கவிஞர் பெருமகனார் கண்ணதாசன் மதுவுக்கு அடிமையானவர். ஆனால் ஒரு போதும் குடிப்பழக்கத்தை உயர்த்திப்பேசியது இல்லை.
“இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து ,பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து மதுவுக்கு எதிராக மதம் வாதாடி போதித்திருக்கிறதே, தவிர அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி அதைத் தடை செய்யச்சொன்னதில்லை”என்கிறார் கவியரசர்.
மது அருந்துவது மேலை நாடுகளில் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதை அப்படியே அடியொற்றி வளர்ந்ததுதான் பம்பாய்.
பணம் படைத்தவர்கள் விருந்துகளில் மது விருந்து அளிப்பது நாகரீகம் ,கவுரவம் என கருதப்பட்டது.
அந்த வழியில்தான் பாலிவுட் பிரபலங்கள் மது அருந்தினார்கள். அந்தப்பழக்கம் அடியோடு அழிந்து விடவில்லை.இன்றும் தொடரவே செய்கிறது.
அண்மையில் மரணமடைந்த ரிஷிகபூர்,விஸ்கி பிரியர்.விரும்பிக் குடிப்பது பிளாக் லேபிள்.
கையில் விஸ்கி கிளாஸ்.சற்றுத் தள்ளி பிளாக் லேபிள் பாட்டில் .புன்னகையுடன் ரிஷிகபூர்.
இந்தப் படத்தை வெளியிட்ட அவரது மனைவி நீத்து சிங் ஒற்றை வரியில் இட்டிருக்கிற தலைப்பு “எங்கள் கதை முடிந்தது.”
அதில்தான் எத்தகைய வலி…!