சில நினைவுகளை மறக்க இயலாது. அது இன்பமோ துன்பமோ வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆனால் முதல் இரவில் எப்படியெல்லாம் பேசினார்கள் என்பதை விட என்ன நடந்தது என்பதுதான் நினைவில் இருக்கும்.!
மறக்க இயலாத சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறபோது அதில் ஒரு நிறைவு கிடைக்கும்
இயக்குநர் பாண்டிராஜ் அத்தகைய நிகழ்வை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சீயான் விக்ரமின் மகன் துருவ்.
முதன் முதலாக பாலாவின் இயக்கத்தில் தன்னுடைய மகன் நடிக்க வேண்டும் என்று சீயான் ஆசைப்பட்டார். அதற்காக தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார்கள்.
ஆனால் பாலா இயக்கத்தில் வளர்ந்த அந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை . இதனால் தெலுங்கு படத்தின் இயக்குனர்களில் ஒருவரை வைத்து ஆதித்யவர்மா என்கிற பெயரில் புதிதாக அர்ஜுன் ரெட்டியை படமாக்கினார்கள்.
அதன் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாததில்லை .சரி கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும்.
வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ்.
மலரும் நினைவுகளாக ஒன்றை சொல்லியிருக்கிறார்.
“பசங்க படத்துக்காக அன்பு கேரக்டரில் நடிக்க துருவ்வையும் ,ஜீவா கேரக்டரில் நடிப்பதற்கு நாசர் சாரின் மகன் அபி ஹாசனையும்தான் முயற்சி பண்ணினேன். அது நடக்காமல் போய்விட்டது .
ரொம்ப நாள் கழித்து விக்ரம் சார் வீட்டுக்கு கதை சொல்லப் போயிருந்தேன்.அப்ப ‘இவர்தான் பசங்க படத்தில் நடிப்பதற்கு நம்ப துருவ்வை கேட்டிருந்தார்’என்பதை விக்ரம் சார் அவருடைய மனைவியிடம் சொன்னார்.
உடனே அந்தம்மா ” என் பையனுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்கும் .கெடுத்திட்டிங்களே”என்று செல்லமாக சொன்னதாக ” பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.