டிவிட்டரில் இணைகிற நோக்கமே கருத்துகளை பகிர்வதற்குத்தான்.!
பத்திரிகைகளின் வழியாக சொன்னால் சில நேரங்களில் கருத்துகள் திருத்தப்பட்டவைகளாகவே மக்களை சென்றடைகின்றன .இதனால் டிவிட்டரில் எவ்வித சேதாரமும் இல்லாமல் கருத்துகள் சேர்ந்து விடுகின்றன.
ரஜினிகாந்த் டிவிட்டரில் இணைந்ததும் கணிசமான ஆதரவாளர்களை பெற்றார். ஆனால் என்றோ ஒருநாள் அதுதான் திருநாள் என்பது மாதிரி எண்ணத்தைச்சொல்லிவிடுவார்.
ஆனால் மக்கள் நீதி மன்றத் தலைவர் கமல்ஹாசனுக்கு டிவிட்டர்தான் அவரது பலமிகு ஆயுதமாக இருக்கிறது.நாட்டில் எந்த நிகழ்வுக்கும் தன்னுடைய கருத்தை பட்படாரென வெடித்து விடுகிறார்.
கொரானா வைரஸ் ,மத்திய மாநில அரசுகளை பற்றிய கண்டனக் கருத்துகள் ,மதுவிலக்கு என எல்லாவிதமான பிரச்னைகளையும் எடுத்து அலசிவிடுகிறார்.
இதன் வழியாக அவரது ஆதரவாளர்களது எண்ணிக்கை 60 லட்சமாக இருக்கிறது. அதாவது உயர்ந்து இருக்கிறது.
ரஜினிக்கு 57 லட்சம் ஆதரவாளர்களே இருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகளை மூட வைத்ததால் கமலுக்கு பெண்களின் ஆதரவும் கணிசமாக கிடைத்திருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி ஏந்தியதோடு சரி ஆனால் மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியதைத்தான் மக்கள் அதிகமாக பேசுகிறார்கள்.