தமிழக சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென ஓர் அடையாளம் உள்ளவர் சரத்குமார்.
தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துவருகிறார். அமரர் கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இரண்டு பாகமாக படமாகப் போகிறது. அநேகமாக பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.
ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியைப் பற்றிய கேள்வியின் போது கண்கலங்கிவிட்டார் சரத்குமார்.
“சிரஞ்சீவியுடன் ஒரு படம் பண்ணவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்தேன். ஒரு நாள் நான் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த செட்டுக்கு சிரஞ்சீவி வந்தார். இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.நான் எத்தகைய சிக்கலில் இருக்கிறேன் என்பதை சொல்லிவிட்டு எடுக்கப்போகும் படத்தைப் பற்றி சொன்னேன். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறார் என்பதை கேட்டபோது அதைப்பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொன்னவர் படப்பிடிப்புக்குத் தேவையான தேதிகளை அங்கேயே கொடுத்தார். மிகவும் அற்புதமான மனிதர்”என்று சொல்லிவந்தபோதே கண்கலங்கிவிட்டார் சரத் குமார் .