பொன்மகள் வந்தாள் தமிழ்த் திரைப்படம் நடிகை ஜோதிகா நடித்திருக்கிற படமாகும்.
இந்தப்படம் வருகிற 29 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தப்படம் மட்டுமல்ல இந்தி ,தெலுங்கு மலையாளம் என்று பல மொழிப்படங்களும் இந்த ஓடிடி தளத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சுட்டு வைத்திருக்கிற பலகாரம் சூடு ஆறுவதற்குள் விற்றாக வேண்டும். இது அந்த வியாபாரியின் கவலை இது.
இதைப்போல கொரானா தோற்று நோயினால் திரைத்தொழிலே முடங்கிக் கிடக்கிற நிலையில் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். அதில் என்ன தவறு?
பிரபல திரைப் படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
“ஓடிடி தளம் வேற. தியேட்டர்கள் தளம் வேற. ஐயோ இது தியேட்டருக்கான வழி இல்லையேன்னு சிலர் ஓடிடி பற்றி கவலைப்படலாம். ஆனால் இரண்டுக்குமே ஆதாரம் தயாரிப்பாளர்கள்தான்.! ஆக இரண்டுமே நமது வாழ்வுக்குரியவை .
இதில எதற்கு கருத்து வேறுபாடு? சண்டையிடுவதற்கு பதிலாக தொற்று நோயில் இருந்து தப்பிக்க வழியைப் பார்க்கலாமே!”என்று சொல்லியிருக்கிறார்.நல்ல யோசனைதான்.!