
திரை உலகில் சிவா என்றாலே சிலருக்கு மேனியெல்லாம் அலர்ஜி தடிப்பேறும் !
அந்த அளவுக்கு அம்மா கிரியேஷன்ஸ் சிவா டெரராக உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்..
அவரது பெயரை நினைவு படுத்துகிற வகையில் ‘நான்தான் சிவா ‘என்கிற படத்தைத் தயாரிக்கிறார் லிங்குசாமி..
‘பையா’, அஞ்சான், ரஜினிமுருகன்,மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றி படைப்புகளை தந்தவர் என்.லிங்குசாமி .
‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, ‘நான்தான் சிவா’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் கதை என்ன?

“ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம்.இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படப் பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது .
கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக ‘உதயம் NH4’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.”என்று சுருக்கமாக சொல்லி முடித்தார் இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம்.












