
ராதிகா ஆப்தேயின் கால்களை வருடிய அந்த தமிழ்ப்பட கதாநாயகன் யார்?
அதற்காக அவரிடம் அறையும் வாங்கியிருக்கிறாராம் அந்த பாதம் வருடி!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.
தோனி ,ஆல் இன் ஆல் அழகுராஜா ,வெற்றிச்செல்வன் ,கபாலி ஆகிய கையடக்கப்படங்களில் தான் தமிழில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இந்திப்படங்கள்தான். வெப்சீரிஸில் வெளியாகிற அந்த மாதிரியான படங்களிலும் நடித்து வருகிறார்.
சற்று துணிச்சலான ஆளு.
பாலியல் தொல்லைகள் பற்றி பேசக்கூடியவர்.

தமிழ்ப்படம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நடிகர் தன்னிடம் சில்லரைத்தனமாக நடந்து கொண்டதாக புகார் சொல்லியிருக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில் அந்த நடிகர் தன்னுடைய பாதங்களை பலான நோக்குடன் வருடினாராம். இதனால் பளாரென அவரை அறைந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்தம்மா தமிழில் நடித்திருப்பது நமக்குத் தெரிந்து நாலே படங்கள்தான் .இவற்றுள் இந்தப்படத்தின் நடிகர் காலை வருடினார் என்பது தெரியவில்லையே. பளார் விட்டதாகவும் சொல்லுகிறார். யாரப்பா அந்த அறை வாங்கிய (அ)சிங்கம்?
இன்னொரு சம்பவம் பற்றியும் ராதிகா ஆப்தே சொல்லியிருக்கிறார்.
ஷூட்டிங் நடக்கும் பொது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்படுவது சகஜம். நடித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் முதுகில் அடி பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. அநேகமாக சண்டைக் காட்சியாக இருக்கலாம்.
அம்மணிக்கு வலி.! ஹோட்டல் அறைக்கு புறப்பட்ட அவருடன் கூடவே வந்திருக்கிறார் படத்தின் ஹீரோ. லிப்டில் ரூமுக்கு சென்று கொண்டிருந்தபோது “ராத்திரியில ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. நைட்ல நான் வேணும்னா இதமா முதுகை நீவி விடுறேன் ” என்று வழிந்திருக்கிறார்.
மறுநாளே நடிகர் வழிந்ததை தயாரிப்பாளரிடம் சொன்னதால் அந்த நாயகன் வந்து ராதிகா ஆப்தேயிடம் மன்னிப்பு கேட்டாராம். யாராக இருக்கும்?
மேலும் சொல்கிறார் ராதிகா ஆப்தே.!
“ஒருவேளை சாப்பாட்டுக்கே நாங்க துந்தனா போட்டுக் கொண்டிருந்தபோது உதவிக்கு வராதவர்களெல்லாம் இன்று அட்வைஸ் பண்றதை பார்த்தால்தான் வேடிக்கையாக இருக்கிறது.”என்கிறார்.