நடிகர் கமல்ஹாசனுடன் இணைத்துப் பேசப்பட்டவர்களில் நடிகை பூஜாகுமாரும் ஒருவர்.
இதற்கு காரணம் அவர் கமலின் குடும்பத்தாருடன் கலந்து விட்டார் என்பதால் !
கமலின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பூஜா குமாரை பார்க்க முடிந்தது.
விஸ்வரூபம்,உத்தம வில்லன் ஆகிய கமலின் படங்களின் நடித்திருக்கிற பூஜாகுமார் இந்திய குடிமகள் இல்லை. அவர் அமெரிக்க குடிமகள் .ஹாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர். அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். தயாரிப்பாளர் கே.ஆர் படத்தில் நடித்திருந்தாலும் அவரது முதல்படமான காதல் ரோஜாவே பேசப்படவில்லை.
ஆனால் கமல்ஹாசனுடன் நடித்த படங்கள் பெருமளவில் பேசப்பட்டது. கமலின் குடும்பத்து நிகழ்வுகளிலும் பூஜா குமாரை காண முடிந்தது.
கிரேஸி மோகன் மறைவின் போது அவரது இறுதிச்சடங்கில் கமலுடன் ஜோடியாக பங்கேற்றார் பூஜாகுமார். கமலின் பிறந்த நாள் விழாவில் கூட கமலின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஒருவராக பங்கேற்றார்.தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸின் புதிய அலுவலக திறப்புவிழா மற்றும் பாலச்சந்தர் சிலை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பூஜாகுமாரும் பங்கேற்றார்.
இதனால் அவர்களது நெருக்கம் பற்றி பலவிதமாக பேசப்பட்டது.
இந்த நெருக்கம் காதல் தொடர்பானதா?
பிரபல இணைய தளத்துக்கு பேட்டி அளித்த பூஜாகுமார் தங்களது நெருக்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
“கமல் சாரையும் அவரது குடும்பத்தினரையும்நீண்ட நெடிய காலமாக தெரியும். நான் அவரோட நடிக்கத் தொடங்கியதிலிருந்து, குடும்பத்தாருக்கும் பரிச்சயம் ஆனேன். தயாரிப்பாளராக இருக்கும் அவரது சகோதரர், அவரது மகள்கள், எல்லாரும் அப்படித்தான் பழக்கமானாங்க. இப்ப அவங்க குடும்ப நிகழ்ச்சிகள்லேயும் பங்கெடுத்துக்கறேன்” என்கிறார்.
“அப்படியானால் கமலின் தலைவன் படத்திலும் நடிக்கிறீர்களா?”
” நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதுவரை எதுவும் ஃபிக்ஸ் ஆகாதநிலையில்,நாளை என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்.” என்கி றார்.