ஜனங்களை சகஜமாக பழக விட்டுப்புட்டு இப்ப கொரானா தொகை ஏறுதேன்னு அரசு அலறுவதில் அர்த்தமே இல்லை.
முதலில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதே மகா கொடிய தப்பு. சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. அவர்களுக்கு இன்ன இடத்தில்தான் குடிக்கவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தலும் இல்லை. வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு குடித்து விட்டு ஆடி ஆடி வீட்டுக்கு போகிறவர்கள் ஏராளம்.
சமூக இடைவெளி என்பதை வெகு சிலரே பின்பற்றுகிறார்கள்.
தற்போது வருத்தப்படக்கூடிய செய்தி யாதெனில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்துகிற ஆதரவற்றோர் விடுதியில் 18 பெரியவர்களுக்கும் 2 பெண் பணியாளர்களுக்கும் கொரானா நோய்த் தோற்று என்கிறார்கள் .இதனால் அந்த விடுதியை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
இந்த லாரன்ஸ்தான் கொரானா தடுப்பு நிதியாக அரசுகளுக்கு 3 கோடி நன்கொடை கொடுத்திருக்கிறார்.அம்மா உணவகங்களுக்கு 50 லட்சம் நிதியும் கொடுத்திருக்கிறார்.
லாரன்ஸ் ஒரு தர்மவான் அவரது ஆதரவற்றோர் இல்லத்துக்கு போகக்கூடாது என்று நீதி நியாயம் பார்த்ததா கொரானா?