ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை படம் வழியாக பேசப்பட்டவர். சாதாரண குடும்பத்துப் பெண். பிரபலங்களின் பின்பலம் இல்லாத குடும்பம்.
திருச்சி ஐ ஐ எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்து சில உண்மைகளை பேசியிருக்கிறார்.
அது திரை உலகம் தொடர்பான பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகிற நடிகைகளுக்கு மட்டுமேன் மிகுந்த மதிப்பு ,மரியாதை கிடைக்கிறது என்பதை அவரது பேச்சில் இருந்து அறிய முடிகிறது.
“சினிமா துறையில் நான் சந்தித்த ஒரு பிரச்சனை கலர். எனது நிறம்.
நிறமும் சிலருக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது.
எல்லா வட இந்திய நடிகைகளையும் போல (கவர்ச்சி.) ஆடை அணிவது எனக்குத் தெரியாது. அது ஒரு பிரச்சனையாக இருந்தது. (உண்மையா ?)
நான் தமிழில் பேசியதால் சிலர் என்னை நிராகரித்தனர்.
அப்போதுதான் ‘அட்டகத்தி’ பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தேன். ரசிகர்களால் கவனிக்கப்பட்டேன். ‘காக்கா முட்டை ’ எனது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம்.
எனது வாழ்க்கையில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் உட்பட அனைத்து வகையான விமர்சனங்களையும் சிக்கல்களையும் நான் எதிர்கொண்டேன். துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு திருப்பித் தரும் அளவுக்கு நான் தைரியமாக இருக்கிறேன். எல்லா பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”
இவ்வாறு அவர் பேசி இருக்கிறார்..
தமிழ்த்திரையுலகில் பாலியல் குற்றசாட்டு குறித்து சில நடிகைகள் பேசி வந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் பாலியல் குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.