கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் பெரிய .வெற்றி அடைந்தது.
இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியர். இப்படத்தில் தனுசுக்கு நிகராக அவரது இயல்பான நடிப்பும் மிகவும்பேசப்பட்டது. யதார்த்தனமான கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருந்தார்.
மலையாளத் திரை
மஞ்சுவாரியர் தற்போது நடிக்கும் புதிய மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அப்பட போஸ்டரில், அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக , அசத்தலான உடை ,கண்களில் கண்ணாடி அணிந்து, பனிக் குவியலுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார். சனல் குமார் சசிதரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ‘கயட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது கடும் பனிப்பொழிவு ,மழை என பெய்துபெரிய தடையை ஏற்படுத்தியது. கேரளா, ஹிமாச்சல பிரதேச அரசு இரண்டும் படக்குழுவினரை காப்பாற்றுவதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டன. இவர் நடிகர் திலீப்பை மணந்து பின்னர் டைவர்ஸ் பெற்றவர்.