கொரானா வைரஸால் மொத்தப்பட உலகமும் முடங்கி மூலையில் கிடக்கிறபோது ராம் கோபால்வர்மா மட்டும் எப்படி கொரானா பற்றிய படத்தை எடுத்து விட்டு அதன் முன்னோட்டக் காட்சியையும் வெளியிட முடிந்தது.?
உலகிலேயே முதன் முதலாக எடுக்கப்பட்ட கொரானா படம் என்பதாக டைட்டிலில் போட்டிருக்கிறார்.
இரவு நேரம்…மற்றொரு அறையில் படுத்திருக்கிற மகள் தொடர்ந்து இருமுகிற சத்தம் கேட்டு அப்பா போகிறார்.
“என்னம்மா செய்யிது” என்று கேட்கிறார்.
மக்களும் அதற்கு தெலுங்கில் பதில் சொல்கிறாள். இப்படி செல்கிற முனோட்டக் காட்சியை அவரால் எப்படி இந்த ஊரடங்கு காலத்தில் எடுக்க முடிந்தது?
அரசு அனுமதி கொடுத்ததா? அரசின் ஊரடங்கு உத்தரவினை ராம் கோபால்வர்மா மட்டும் மீறவில்லை. அதின் நடித்த நடிகர்கள் உள்பட அத்தனை டெக்னீஷியன்களுமே மீறி இருக்கிறார்கள்.
அவர்கள்மீது ஊரடங்கு விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க முடியுமா?
ராம் கோபால் வர்மா தயாரித்திருக்கிற படத்தை இயக்கி இருப்பவர் அகஸ்திய மஞ்சு .