கொரானா லாக்டவுன் காலத்தில் ‘கொரானா’வை பற்றி எடுக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமையுடன் ஒரு ட்ரெய்லரை சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டிருந்தார்.
இவரால் இது எப்படி சாத்தியப்பட்டது என்கிற சர்ச்சை ஒரு பக்கம் , அந்த படத்தின் தயாரிப்பாளர் பாதியிலேயே கழன்று கொண்டு விட்டார் என்கிற செய்தி மற்றொரு பக்கம்..
ஒரு வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட அந்த படத்தை தொடர தயாரிப்பாளர் விரும்பவில்லையாம் .
இதனால்தான் மல்கோவா படத்துக்கு ராம் கோபால்வர்மா போய் விட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆக கொரானா வைரஸ் படம் முன்னோட்டத்துடன் நின்று போனது வர்மாவுக்கு ஒரு பின்னடைவுதான்.ஆனால் அதை அவர்தான் உறுதி செய்ய வேண்டும்
எத்தனையோ பின்னடைவுகளை பார்த்த அவர் இதற்கெல்லாமா பயப்படப்போகிறார்.
மல்கோவாவுடன் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வருவார் என்கிறார்கள்