வைகாசி பிறந்தாலே கல்யாண செய்திகள் கருக் கொண்டு விடும்.கதைகள் பல பிறக்கும். ஏதாவது ஒரு கல்லினால் மாங்காய் விழுந்து விடாதா என்று அடுத்தடுத்துக் கல் வீசப்படும்.
இப்படித்தான் இந்த வைகாசி தொடக்கத்தில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா கல்யாணம் எளிய முறையில் ஒரு கோவிலில் நடந்துவிட்டதாக ஒரு சேதி .
ஊரில் உள்ள எல்லா கோவிலும் மூடப்பட்டு மூலவரே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிற நேரத்தில் இவர்களுக்காக எந்த திருக்கோவிலின் கதவுகளை திறந்து விட்டிருந்தது அறநிலையத் துறை?
இதோ அடுத்து ஒரு செய்தி.!
சிலம்பரசனுக்கும் லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுக் குடும்பத்துப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கப்போவதாக ஒரு பிரபல நாளேடு தகவல் தருகிறது.
முன்னர் இதை போன்று ஒரு லண்டன் பெண்ணைப் பற்றிய கதை சிம்புவுடன் இணைத்துப் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியா இந்த செய்தி என்பது தெரியவில்லை.
எதுஎப்படியானால் என்ன சிம்புவுக்கு பெண் கொடுக்க எத்தனையோ கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கிறார்கள்.வந்திருக்கும் செய்தி உண்மையானால் எஸ்.டி .ஆரின் லட்சக் கணக்கான ரசிகர்கள் விழா எடுக்க காத்திருக்கிறார்கள்.
ஆனால் நமக்கு கிடைத்திருக்கிற செய்தி வேறு மாதிரியாக இருக்கிறது.
சிம்புவின் அருகில் இருக்கும் ஒரு நடிகர் சொன்ன தகவல் செய்தியாக மாறியதாக சொல்கிறார்கள் .வி.டி.வி.கணேசுக்கு வேண்டிய நடிகராம் அவர்.
சகலகலா வல்லவர் டி .ராஜேந்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது “உண்மையில்லைண்ணே ,எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .இன்னும் அமையல “என்றார்.
“அமையும். சிம்புவுக்கென ஒரு பெண் இனிமேலா பிறக்கப்போகிறாள்?”
நல்லதே நடக்கும்.!