கெனன்யா ஃப்லிம்ஸ் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளை தயாரிப்பதையும் குறிக்கோளாகவைத்திருக்கிறார்கள்..
பாலிவுட் படங்களான “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை இயக்குநர் ஸ்வாதினி இயக்க விருக்கிறார்.
“ஓ மை கடவுளே” மூலம் பேசப்பட்ட அசோக்செல்வனுடன் இணைந்து ஒரு படம் தயாராகிறது. நடிகை நிஹாரிகா இணையாக நடிக்கிறார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் .
தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்..
படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் , ஒளிப்பதிவாளராக ஏஆர் சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.