‘உயிரே’ (தில்சே) படத்தில் தைய தைய தைய தையா என்ற பாடலுக்கு ஆடியவர்,இந்தி நடிகை மலைகா அரோரா.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.இருவரும் இணைந்து படங்களை தயாரித்து வந்தனர். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், தனியாக வசித்து வரும் 47 வயதான மலைகா அரோராவும்,மறைந்த ஸ்ரீதேவியின் கணவரும் போனிகபூரின்முதல் மனைவியின் மகனுமான 35 வயதான அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர்.பொருந்தா காதலாக இருந்தாலும் அவர்கள் இருவரும் விட்டு விலகுவதாக இல்லை. டேட்டிங்,பார்ட்டி என்று சுற்றுகிறார்கள் .
விரைவில் கல்யாணமும் செய்து கொள்ளப்போகிறார்களாம்.
நடிகை மலைகா மும்பை பாந்த்ரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மகன் அர்ஹானுடன் வசித்து வருகிறார். இவரது குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட,அவர் வசிக்கும் மொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.