இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லீ,
ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார் . மூன்றுமே ஹாட்ரிக் வெற்றியை தர,அட்லீ நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது கை கூடாமல் கனவாக கலைந்தது.
அட்லி தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவரின் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கிறாராம். ஆனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி அந்த கெட்டப்பில் இருந்து வெளிவரமுடியுமா?கேள்விக்குறிதான்!