இப்படியும் மனிதாபிமானமுள்ள நடிகைகளும் இருக்கிறார்கள்.அதாவது பாலிவுட் நடிகை அம்ரிதா ராவை சொல்கிறோம்.
சில நடிகைகள் அவர்களது டச் அப் உதவிப் பெண்களுக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லை. தயாரிப்பு நிறுவனம் தருகிற பேட்டா காசுடன் சரி.மற்றபடி நடிகைகள் கையறுத்தாலும் காசு பெயராது .பாதுகாப்பாக வரும் தாய்க்குலமே வாய்க்குள் போட்டுக் கொள்ளும்.அப்படிப்படட புண்ணியவதிகள் இருக்கிறார்கள். ஆனால் அம்ரிதாவின் கதை வேற.!
கொரோனா வைரஸ்காரணமாக லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம் சிக்கலாகி இருக்கிறது.
தினசரி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்ரிதா ராவ். தனது வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை வாடகை வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
அம்ரிதா ராவ். சமீபத்தில் வெளியான தாக்கரே பயோபிக்கில் மீனா தாக்கரேவாக நடித்திருந்தார்.
இவருக்கு மும்பையில் சில வீடுகள் உள்ளன. இதுபற்றி நடிகை அம்ரிதா ராவ் கூறும்போது, எனது வீடுகளில் வாடகைக்கு இருக்கும் சிலர், நடிப்பு, ஒளிப்பதிவு போன்ற தொழில்களில் உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளம் உத்தரவாதம் இல்லை.கொரோனா தொற்று மோசமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதால், அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பியுள்ளனர். இந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிவதால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் வாடகையை வாங்கவில்லை. அதே நேரம் வேலையை இழக்காமல் இருப்பவர்கள், வாடகையை கொடுத்துவிடலாம். லாக்டவுனை சாக்காகப் பயன்படுத்தி கொடுக்காமல் இருக்கக் கூடாது’ என கூறியுள்ளார்.
கோலிவுட்டில் அப்படி யாரேனும் புண்ணியவான்கள் புண்ணியவதிகள் இருக்கிறார்களா?