வரலட்சுமி சரத்குமார் .போடா போடி படத்தில் சிம்புவுடன் நாயகியாக நடித்திருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவர் நடித்து அண்மையில் வெளியான படம்தான் வெல்வட் நகரம்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் டேனி என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.இயக்கியவர் சந்தான மூர்த்தி .இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே ,வேல.ராமமூர்த்தி அனிதா சம்பத் உளப்பட பலர் நடித்திருக்கிறார்கள் .
இந்த படத்தில் டூப் போடாமல் சண்டைக்கு காட்சிகளில் நடித்திருக்கிறார் வரு. சந்தோஷ் தயாநிதி இசை.இந்த படம் ஓடிடி தளத்துக்கு வரப்போகிறது
ஜோதிகா ,கீர்த்தி சுரேஷ் வரிசையில் வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து விட்டார்.இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.